ரமழான் மாதம் நோன்பிருந்து இறைவனை வழிபடும் மாதம் மட்டுமல்ல, முஸ்லிம்கள் ‘ஸகாத்’ எனப்படும் தான-தர்மங்களையும் அதிகம் செய்யும் மாதம் என்பதால், ரமழான் மாதங்களில் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பதை ஒரு பிழைப்பாகவே சிலர் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே துபாய் நகரின் மஸ்ஜித்கள் , மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பரபரப்பு மிக்க சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 70 பேரை துபாய் போலீசார் பிடித்துள்ளனர்.
தற்போது பிடிபட்டவர்களில் பெண் ஒருவர். இவர் பிளைட் ஏறி பிசினஸ் விசாவில் துபாய் சென்றிருப்பதும், அங்குள்ள நட்சித்திர ஓட்டல் ஒன்றில் தனது குழந்தைகளுடன் தங்கிருந்து பிச்சை எடுப்பது தெரியவந்தது. இந்த பெண்மணியிடம் துபாய் நாட்டின் நாணயம் திர்ஹம் இலங்கை ரூபாய் மதிப்பு சுமார் 5 இலட்சம் ) துபாய் பொலிசார் கைப்பற்றினர். தொடர்ந்து பிச்சை எடுப்பவர்களை பிடிப்பதற்காக பொலிசார் தனிப்படையினரை நியமித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.