Breaking
Fri. Jan 10th, 2025

துபாய் கடற்கரையோரம் முதல்முறையாக இலவச வயர்லெஸ் இண்டெர் நெட் வசதி துபாய் முனிசிபாலிட்டி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பனைமரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள 6 மீட்டர் உயரமுள்ள இந்த ஸ்மார்ட் பாம்\ நிலையங்களில் 53 மீட்டர் சுற்றளவில் 50 பயனாளிகளுக்கு உபயோகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மூல ம் செய்லபடும் இந்த நிலையத்தின் மூலம் கடற்கரை விதிகள், வழிகாட்டல்கள், குறிப்புகள், மற்றும் கடலின் சூழ்நிலை,பருவநிலை குறித்த அறிவிப்புகள் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்வதோடு மொபைன் போன் மற்றும் கணினிகளுக்கு சார்ஜ் செய்து கொள்ள முடியும் .

உலக புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலான‌ புர்ஜ் அல் அரப் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சென்ற ஏப்ரல் மாதம் முதல் சபீல் பூங்காவில் இது போன்ற நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டது குறிப்பிடதக்கது.

Related Post