Breaking
Mon. Nov 25th, 2024
துபாயின் தேரா பகுதியில் இரு 5 மாடி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. துபாயின் தேரா பகுதியில் சலாவுதீன் சாலையில் உள்ள கிரவுன் ப்ளாசா மாலுக்கு அருகே உள்ள இரு 5 மாடி கட்டிடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த இரு மாடி கட்டிடங்களும் தற்போது முழுவதுமாக எரிந்து கொண்டுள்ளன. இக்கட்டிடங்கள் முராகாபாட் போலீஸ் நிலையம் முன்பாக உள்ளன. கடந்த 30 நிமிடங்களுக்கு முன்பு இத்தீவிபத்து ஏற்பட்டது. இதன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பிடித்த தீ கட்டிடங்களுக்கும் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால் இது

உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த தீ விபத்து இலங்கை  நேரப்படி நேற்று இரவு 7.25 மணிக்கு நிகழ்ந்துள்ளது. ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த கட்டிடங்களில் இருப்போரை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவரை பாதுகாப்பு படைவீரர்கள் மீட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் க்ரீன் லைன் பகுதியில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 3.30 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2

3

12239952_475692402609705_3764479178212240289_n

12241391_475692425943036_1402925389396547745_n

12241682_475692449276367_4378611042382920228_n

By

Related Post