Breaking
Sun. Dec 22nd, 2024

கட்டார் நாட்டில் இடம்பெறும் விபத்துக்களை புகைப்படமெடுத்து, அதனை Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்வது, இனிமேல் தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவித்திருக்கிறார்கள். இது சம்பந்தமான செய்தியை கடந்த (04.06.2015) வியாழக்கிழமை தோஹா நியூஸ் ஊடகத்தில் காணலாம்.

குற்றம் நிரூபிக்கப்படுபவர்கள் மீது மூன்று வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை QR100,000 ($27,460) அபராதம் விதிக்கப்படும்.

இத் தகவலை கத்தாரில் வசிக்கும் உங்கள் உறவினர், நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். இவ்வாறான விபத்துக்களின் போது, சுற்றி நின்று புகைப்படங்களை எடுப்பவர்களிலும், அவற்றை சமூக வலைத்தளங்களினூடாகப் பகிர்ந்து கொள்பவர்களிலும் இலங்கை, இந்தியா உட்பட்ட ஆசிய நாட்டவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

இத் தண்டனைகளுக்கு ஆளாகுபவர்கள் நீங்களாகவோ, உங்கள் நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ இருக்க வேண்டாம்.

Related Post