Breaking
Fri. Nov 15th, 2024

வெல்லம்பிட்டிய, மெகொட கொலொன்னாவ, புத்கமுவ ஆகிய பிரதேசங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்கள், வெள்ளம் வடிந்து வருவதனால் தமது வீடுகளுக்குச் சென்று துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளுக்கு கொலொன்னாவ பள்ளிவாசல் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமாவின் தலைமையின் கீழ் இயங்கும் நிவாரண இணைப்புப் பணியகத் தொண்டர்கள் மற்றும் சமூக நல அமைப்புக்களும் உதவி வருகின்றன.

அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்தப் பிரதேசங்களுக்கு பலதடவை சென்று, பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணங்களையும், பாவனைக்குத் தேவையான பொருட்களையும் வழங்கி வைத்திருந்தார். நேற்று மாலை (26/05/2016) மீண்டும் அந்தப் பிரதேசத்துக்குச் சென்ற அமைச்சர், பாதிப்புற்ற வீடுகளுக்குச் சென்று, துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வரும் உரிமையாளர்களிடம், அவர்களுக்கு வேண்டிய ஏனைய தேவைகள் பற்றி கேட்டறிந்துகொண்டார்.

மெகொட கொலொன்னாவ வீதியில் இருமருங்கிலும், பாரிய அளவில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை உடனே அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநகர சபை உயரதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

வெள்ளத்தால் பாதிப்புற்றோர் தங்களது நஷ்டஈடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் கிராம சேவகர்களிடம் உடன் பதிவு செய்யுமாறும், இழந்த பொருட்களின் பட்டியலை சமர்ப்பிப்பதன் மூலம், கிராம சேவகர்களின் பணியை இலகுவாக்க முடியும் என்ற அறிவுறைகளையும் வழங்கினார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விடயத்தில் தெளிவில்லாத ஏனையவர்களுக்கும், பதிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்குமாரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டினார்.

mekoda2 13288966_596376493861733_616216657_n

By

Related Post