வெளிநாட்டில் சிகிச்சை பெற்று கொள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய விசேட நீதிபதி குழு அனுமதி வழங்கியுள்ளது.
தனது தலையில் சத்திர சிகிச்சையொன்றை சிங்கப்பூரில் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றத்தின் அனுமதியை கோரி இருந்தாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இம் மாதம் 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பவர் 2 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொள்ள முடியும் எனவும் துமிந்த சில்வாவின் கடவு சீட்டின் பிரதி ஒன்றை நீதிமன்றுக்கு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர படுகொலை தொடர்பில் 11ஆவது குற்றவாளியாக துமிந்த சில்வா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.