Breaking
Thu. Dec 26th, 2024

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில், இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

அத்தனை பேரும் கடும் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு ஏற்கெனவே வழங்கியிருந்த பிணையும் அதிகரித்தார்.

அதன் பிரகாரம், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையாளர்கள் இருவரை முன்னிலைப்படுத்துமாறே அதிகரிக்கப்பட்ட பிணையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மாதத்துக்கு ஒருமுறை பொலிஸில் ஆஜராகுமாறும் நீதிபதியினால் பணிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என 13பேர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் 11 சந்தேகநபர்களே நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர்.

2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் போது கொலன்னாவையில் வைத்து பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்து படுகொலை செய்ததாக துமிந்த சில்வா எம்.பி உள்ளிட்ட 13 எதிராக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

பிணை நிபந்தனையை மீறினால், சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவர் என்று மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னக்கோன், சந்தேகநபர்களை எச்சரித்தார்.

Related Post