Breaking
Fri. Nov 15th, 2024

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உயரதிகாரிகள், தும்புத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி, அக்கரைப்பற்று, விருதோடை, நல்லாந்தழுவ, புழுதிவதிவயல், கடையாமோட்டை, கனமூலை ஆகிய பிரதேசங்களில் காலாகாலமாக தும்புத் தொழிலை மேற்கொண்டு வரும் தும்பு உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள், அமைச்சர் றிசாத் பதியுதீனை மதுரங்குளியில் சந்தித்து, தாங்கள் இந்தத் தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் வடமேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஏ. யஹியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், பா.உ நவவியும் பங்கேற்றிருந்தார்.

“இந்தப் பிரதேசத்தில் சுமார் 120 தும்பு ஆலைகள் இருக்கின்றன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தும்புத் தொழிலாளர்கள் இந்தத் தொழிலையே நம்பி வாழ்கின்றனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஒரு கிலோ தும்பை 25 ரூபாவுக்கு விற்பனை செய்த நாம், இப்போது ஒரு கிலோ தும்பை 18 ரூபாவுக்கே விற்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். சீனக் கம்பனி ஒன்று இந்தப் பிரதேசத்தில் காலூன்றி பெருமெடுப்பில் இந்தத் தொழிலை மேற்கொண்டு வருவதால், நாங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். அரசாங்காம் இதற்குரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்” இவ்வாறு அவர்கள் அமைச்சரிடம் முறையிட்டனர்.

இவற்றைக் கேட்டறிந்த அமைச்சர், இது தொடர்பில் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சர்வதேச வர்த்தகம் மூலோபாய அபிவிருத்தி  அமைச்சர் மலிக் சமரவீர அவர்களின் ஆலோசனையையும் பெற்று தும்பு உற்பத்தியாளர்களினதும், தும்புத் தொழிளாலர்களினதும் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

14658325_657821597717222_223859769_n 14658361_657353184430730_2001469854_n 14686288_657822051050510_2075360746_n    

             

By

Related Post