துருக்கியில் 42 ஊடகவியலாளர்ளைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித் துள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கைது பட்டியலில், துருக்கியின் முன்னணி வர்ணனையாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்லி லிகக் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில், துருக்கியில் தோல்வியடைந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னர் ஆயிரக்கணக்கான கைது நடந்தன.
இதனிடையே மக்கள் விரும்பினால் தூக்கு தண்டனைக்கு ஆதரவளிப்பதாக துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், துருக்கியில் மீண்டும் மரணதண்டனை கொண்டுவரப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பினராக சேர நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்படும் என அதன் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.