துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 350 மில்லியன் டொலர் (4,999.75 கோடி ரூபாய்) வழங்குவதற்கு துருக்கி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
துருக்கியின் எக்ஷிம் வங்கியின் ஊடாக இந்த கடன்தொகை வழங்கப்படும் என்றும் அதற்கான ஒப்பந்தம் இலங்கை – துருக்கிக்கு இடையில் விரைவில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவுலட் கவுசோக்லு மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதுதொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.