Breaking
Fri. Nov 22nd, 2024

துருக்கியில் இராணுவப் புரட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் அறிந்துகொள்ள 00905340102105 என்ற தொலைபேசி இலக்கத்தை துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

துருக்கியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையிலேயே, துருக்கி தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான்புலில் வாழும் இலங்கையர்களுக்கான அவசர உதவி தொலைபேசி இலக்கங்களை துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

துருக்கியில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. துருக்கியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் அங்காராவில் அரசு மாளிகை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. போஸ்பரஸ், சுல்தான் முகமது ஆகிய பாலங்கள் மூடப்பட்டு இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி, இஸ்தான்புல்லில் உள்ள அதர்துக் விமான நிலையம் மூடப்பட்டு யுத்த டாங்கிகளுடன் இராணுவத்தினர் ரோந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,  துருக்கி நாட்டில் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. மேலும் துருக்கி தலைநகர் அங்காராவில் கடும் துப்பாக்கி சண்டை இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களிலும் இராணுவம் குவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் பதற்றம் நீடித்து வருவதால், இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு இலங்கை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post