Breaking
Sun. Dec 22nd, 2024
முக்கிய விமானநிலையத்தில் மூன்று தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தி, நாற்பதுக்கும் அதிகமானோரை கொன்றதை அடுத்து இன்று துருக்கி தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கின்றது.
இந்த தாக்குதலில் இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமும் அடைந்துள்ளனர்.
இறந்தவர்களில் பதின்மூன்று பேர் வெளிநாட்டவராவர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பே இருப்பதாக தாம் நம்புவதாக துருக்கிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
2
இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பாதிக்கப்பட்ட துருக்கியிடம் தங்களின் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் புடின், துருக்கி அதிபரை தொலைபேசியில் அழைத்து தனது அனுதாபங்களை தெரிவித்ததாக கிரம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த நவம்பரில், சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய ஜெட் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தி இரண்டு விமானிகள் உயிரிழப்புக்கு காரணமான சம்பவத்துக்கு பிறகு, தற்போது தான் இரு நாட்டு தலைவர்களும் முதல்முறையாக உரையாடியுள்ளனர்.
மேற்கூறிய விமான தாக்குதல் சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜிய உறவில் நெருக்கடியை ஏற்படுத்தியது. துருக்கியின் மீது ரஷ்யா பொருளாதார தடை விதித்தது.
துருக்கி அதிபர் எர்துவான் , ரஷ்யாவிடம் தங்கள் நாட்டின் சார்பாக முறையான மன்னிப்பை வெளியிட்ட பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு திங்கள்கிழமையன்று மேம்பட்டது.
இரு தலைவர்களுக்கும் இடையேயான இன்றைய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக துருக்கி நாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

By

Related Post