Breaking
Fri. Nov 15th, 2024
Supporters of Turkish President Recep Tayyip Erdogan demonstrate at the Turkish consulate in Stuttgart, Germany, early Saturday July 16, 2016. Turkish President Recep Tayyip Erdogan told the nation Saturday that his government was working to crush a coup attempt after a night of explosions, air battles and gunfire across the capital. Officials said the coup appeared to have failed as Turks took to the streets overnight to confront troops attempting to take over the country. (Andreas Rosar/dpa via AP)

-முகம்மட் நிரோஸ் –

தெருக்களில் இறங்கி
திரண்ட மக்கள்
துருக்கியை மீட்டதன்
துணிச்சலைப் புகழ்ந்து
முறுக்கிறார் மீசையை
முக நூலில் பலபேர்
கிறுக்கர்கர்கள் சில பேர்
கிண்டலும் செய்கிறார்
பொறுக்குது இல்லையே
போஸ்ட்களைக் கண்டால்.

திருக்குர் ஆனை
திரும்பியும் பாராரும்
சிர்க்கை பித் அத்தை
செய்யும் மனிதரும்
பர்ளான தொழுகையை
பாழாக்குவோரும்
இருக்கிற நாட்டுக்கு
எதுவும் செய்யாரும்
துருக்கி நாட்டுக்காய்
துடிப்பதில் பயன் என்ன?

புரட்சி வெல்லனும்
புது ஆட்சி வரனும்
பிரச்சினை தோன்றனும்
பிறகு தங்களின்
திரைச் சீலை பின்னுள்ள
திருட்டுக் கொள்கையை
கரைச்சல் இன்றி
ஹயாத்தாய் ஆக்கலாம்
என்று எண்ணி
இருந்த சிலபேர்
இன்று தோற்று
இழி நிலை அடைந்ததால்
கன்றாவி போஸ்ட்களை
கண்டபடி போடுகிறார்.

முஸ்லிம்கள் வெற்றி
முன்னேற்றம் என்பது
இஸ்லாத்தில் முறையாய்
இருப்பவர்க்கே இனிதாகும்
மற்றவர்க்கு அது வெறும்
மற்றுமொரு செய்தியாகும்.

By

Related Post