கான் பாகவி
துருக்கி பெயரளவில் முஸ்லிம் நாடு. ஆனால், இஸ்லாம் அரசாங்கத்தில் இல்லை. அண்மைக் காலமாக மாற்றங்கள் தெரிகின்றன. துருக்கி பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு இப்போது அனுமதிக்கப்படுகிறது.
அவ்வாறே பள்ளிகளில் திருக்குர்ஆன் கற்பிக்கப்படும் என்ற முடிவையும் அரசு எடுத்துள்ளது. திருக்குர்ஆனைக் கற்கவும் விளங்கவும் ஏதுவாக அரபிமொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படும். இதன் மூலம் பல்கலைக் கல்வி எளிதாகும்; அடுத்த தலைமுறை அரசியல் மாற்றங்களையும் இறைவேதத்தின் சரியான விளக்கத்தையும் புரிந்துகொள்ள இயலும்.
இப்போது பதவிக்கு வந்துள்ள துருக்கி அதிபர், ‘மார்க்க இமாமத்’ பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. பிறகுதான் ‘மர்மரா’ பல்கலைக் கழகத்தில் பணி நிர்வாகவியல் படித்தார். மற்ற மாணவர்களைப் போன்றே அவருக்கும் அரசியல் பாடம் படிக்க அனுமதி கிடைக்கவில்லை. (sm)