Breaking
Sun. Dec 22nd, 2024
புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கருகில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை பஸ்தியன் மாவத்தை பஸ் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஊடாக மனிங் சந்தைக்கு வரும் பொதுமக்களே இந்த துர்நாற்றத்தினால் பல்வேறு அளெகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மிதக்கும் சந்தை அமைந்துள்ள வாவி பகுதியானது பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதாலேயே இவ்வாறு துர்நாற்றம் வீசுவதாக இங்கு வசிக்கும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக பல்வேறு  தேவைகளுக்காக தலைநகரிற்கு வருவோரும் இதனால் பாதிப்புக்குள்ளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துர்நாற்றம் காரணமாக கொள்வனவாளர்களின் வரவு குறைந்துள்ளதாக மிதக்கும் சந்தை கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post