Breaking
Fri. Nov 22nd, 2024

அரசாங்கத்தினால் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக நகர அபிவிருத்தி  திட்டத்தின்  மூலம் நாடு அதல பாதாளத்துக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் நிலவுகின்றன. எனவே இது தொடர்பான பூரணமான அறிக்கையொன்று எதிர்வரும் வாரம் மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்படும்  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே    அவர் இதனை தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்

மேலும் அரசாங்கத்தில் தற்போதைய நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகர அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள துறைமுக  நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் தெளிவான அறிக்கையொன்றை எதிர்வரும் திங்கட்கிழமை மக்கள் விடுதலை முன்னணி வெளியிடும். அந்த அறிக்கையின் பிரகாரம் நகர அபிவிருத்தி திட்டத்தில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட உள்ள பிரதான பிரதிகூலங்கள் அனைத்தும்  உள்வாங்கப்பட்டிருக்கும்.

 துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் முற்று முழுதாக நீதிக்கு முரணான வகையிலேயே உருவாக்கப்பட உள்ளது. மேலும் அரசாங்கத்துக்கு சமுத்திரங்களை உள்ளடக்கி அபிவிருத்திகளை  முன்னெடுக்க எந்த விதமான உரிமைகளும் கிடையாது.  அது நாட்டின் சுற்று சூழலுக்கு பல்வேறு விதமான ஆபத்துக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற அதே நேரத்தில் கடல் சார் உயிரினங்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.  மேலும் கடலோர பாதுகாப்பு அதிகார சபையிடமிருந்து 72 முறைப்பாடுகள்  நகர அபிவிருத்தி திட்டம்  தொடர்பாக கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது. எனவே இது தொடர்பாக தெளிவான அறிக்கையொன்று எதிர்வரும் திங்கடகிழமை மக்கள் விடுதலை முன்னணியினால்  வெளியிடப்படும்.

By

Related Post