Breaking
Thu. Dec 26th, 2024

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களுக்கும், துறை முகங்கள் அதிகார சபை தலைவர் காவன் டீ ரத்நாயக்க  ஆகியோருக்குமிடையில் நேற்று (06) புதன் கிழமை மாலை விசேட சந்திப்பொன்று இடம் பெற்றது.

  குறித்த சந்திப்பானது பிரதியமைச்சரின் அலுவலகத்தில் இடம் பெற்றது.துறைமுக அதிகார சபை தலைவர் பிரதியமைச்சராக பதவியேற்றதன் பின் இதுவே  முதல் சந்திப்பாகும்.துறைமுக அபிவிருத்தி மற்றும் திருகோணமலை துறைமுகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு துறை முக விடயங்கள் தொடர்பில் ஆராயுமாறு பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இதன் போது துறை முக அதிகார சபை தலைவரை பணித்தார்.

புதிய திட்டங்கள் அதிக செலவாணியை ஈட்டிக் கொள்ளும் வழி முறைகள் தொடர்பாக துறை முக் அதிகார சபை தலைவர் பிரதியமைச்சருக்கு மேலும் தெளிவு படுத்தினார்.இச் சந்திப்பில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான எம்.பீ.எம்.முஸ்தபா, எஸ்.எம்.றிபாய்  போன்றோர்களும் உடனிருந்தனர்.

Related Post