Breaking
Fri. Nov 22nd, 2024

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ளார்.

“ஐக்­கிய நாடுகள் அமை­தியை கட்­டி­யெ­ழுப்பும் நிதியின் பொறுப்­புக்­கூறல்” என்ற தொனிப்­பொ­ருளில் தென்­னா­பி­ரிக்­காவில் நடை­பெ­றவுள்ள கருத்­த­ரங்கு ஒன்றில் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க உரை­யாற்­ற­வுள்ளார்.

சந்­தி­ரிகா குமா­ர­துங்க இலங்­கையின் சமா­தானம் நல்­லி­ணக்கம் மற்றும் நம்­பிக்­கை­யெ­ழுப்­பு­தலில் பெற்­றுள்ள அனு­ப­வங்கள் என்ற தலைப்பில் உரை­யாற்­ற­வுள்ளார்.

இதே­வேளை இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு தொடர்பில் சந்­தி­ரிகா குமா­ர­துங்க தென்­னா­பி­ரிக்க அர­சாங்­கத்தின் அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக இலங்­கையில் எவ்­வாறு இந்த உண்­மையை கண்­ட­றியும் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை நிறுவி அதன் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது என்­பது குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமாரதுங்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு ஒன்றிலும் தலைமை அதிகாரியாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post