அப்துல் ஜப்பார் சமீம் அறிக்கை
தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் நடைறெவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரிப்பதற்கு திர்மானித்துள்ளதாகத் தெரிவித்து அதன் தலைவர் அப்துல் ஜப்பார் சமீம் ஜே.பி அறிக்கையொன்றை வெளியீட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- கல்முனையை தலைமையகமாகக் கொண்டு முழு தென்கிழக்கிலும் 200க்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு இயங்கிவரும் எமது தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் புதன் கிழமை (05-08-2015) மருதமுனையில் நடைபெற்றபோதே இத்தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் சமூக சேவை நிறுவனமாக செயற்பட்டு வந்த எங்களது நிறுவனம் அவ்வப்போது அம்பாறை மாவட்டத்தினை மையப்படுத்தி அரசியல் தொடர்பிலும்; கவனம் செலுத்திவந்தது.
இதே வேளை கடந்த பத்து ஆண்டுகளாக தேசிய காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்திருக்கின்றது இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் அரசியல் ரீதியான சமூக மாற்றங்களையும் எமது நிறுவனம் ஏற்படுத்தி வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான ஆணையினை கோரும் அகில இலங்கை காங்கிரஸை ஆதரிப்பதற்கான சமூகத் தேவையினை அடிப்படையாக் கொண்டே எமது நிறுவனம் இவ்வரலாற்றுத் தீர்மானத்தை எடுத்துள்ளது
நாங்கள் எடுத்துள்ள இந்தத் தீரமானம் தென்கிழக்குப் பிரதேசத்தில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் அகில இலங்கை மக்கள் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை பெறுவதற்கான சூழழை ஏற்படுத்தும் என நாங்கள் திடமாக நம்புகின்றோம்.
நாம் எடுத்த தீர்மானத்தின் படி எமது நிறுவனம் கல்முனை தொகுதியில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை முதன்மைப் படுத்தியும்,சம்மாந்துறைத் தொகுதியில் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களை முதன்மைப்படுத்தியும்,பொத்துவில் தொகுதியில் கணணிப் பொறியிலாளர் அன்வர் எம் முஸ்தபாவை முதன்மைப்படுத்தியும்,எமத திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எமது நிறுவனம் கல்முனைத் தொகுதியின் அரசியல் அதிகாரத்தை கலாநிதி சிராஸ் மீராசாஹிபுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு முழுமூச்சுடன் செயற்பவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அப்துல் ஜப்பார் சமீம் ஜே.பி மேலும் தெரிவித்தார்.