இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையின் ஒரு அங்கமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது.
தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர், அமைக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவே அரசின் உயர் மட்டக்குழு அங்கு செல்லவுள்ளது.
இலங்கையில் உருவாக்கப்படவுள்ள இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில், மதத் தலைவர் களைக் கொண்ட ஒரு கருணைச் சபையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடுகளை வழங்குவதற்கான ஒரு குழுவும் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன் இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு உட்பட்டே காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்கான நிரந்தர அலுவலகமும் அமைக்கப்படவுள்ளது.
காணாமற்போனோர் குறித்த அலு வலகத்துக்குச் செஞ்சிலுவைச் சர்வ தேசக் குழுவின் ஆலோசனையும் பெறப்படவுள்ளது. இது குறித்த பேச்சுக்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும், அதன் கீழ் அமைக்கப்படும் பொறிமுறைகளையும் உருவாக்குவது தொடர்பான சட்டவரைவுகள், அடுத்த ஆண்டுக்கான வரவுdசெலவுத் திட்டத்துக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.