“அதிகார பரவலாக்கலுக்கு அரசு தயாராகவே இருக்கிறது. இதுகுறித்து பேச்சு நடத்த தெரிவுக்குழுவுக்கு வருமாறு ஐக்கியத் தேசியக் கட்சி, தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய எதிர்கட்சிகளுக்கு பல முறை அழைப்பும் விடுக்கப்பட்டது.
எனினும், இவர்களோ தெரிவுக் குழுவுக்கு வருகைத் தராது தற்போது நிறைவேற்று அதிகாரமுறை அழிப்புக் கோத்தை கையில் எடுத்து அரசியல் நடத்தி வருகின்றனர்”
இவ்வாறு அமைச்சர் டிலான் பெரேரா குற்றம் சுமத்தினார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் நேற்று முற்பகல் நடத்தப்பட்ட செய்தியா ளர் மாநாட்டின் போதே அவர் இத னைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக் கையில்,
“”எதிரணியின் பொது வேட்பாரான மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஒழிப்பு பிரசாரத்தை வைத்து மட்டுமே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள் ளார்.
ஆனால், இப்போதைய சூழ்நிலை யில் நாட்டு மக்கள் இந்த தேர்தல் முறைமை ஒழிக்கப்பட வேண்டு மென்று கருதுகின்றார்களே ஒழிய நிறைவேற்று முறை அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தவில்லை.
அதுமட்டுமன்றி, ஒருவேளை மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க முடியாது.
ஏனெனில், மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பலம் எமக்கே இருக் கின்றது. நாட்டின் யாப்பினை மாற்றிய மைக்க வேண்டுமெனில் நாடாளு மன்றத்தினால் மட்டுமே முடியும்.
ஆகவே, நிறைவேற்று அதிகார முடைய ஜனாதிபதி முறைமையை நாம் நினைத்தால் மட்டுமே இல்லா தொழிக்க முடியும்.
எனினும், எமது அரசானது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பேச்சு நடத்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கியத் தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.பி.வி ஆகிய கட்சிகளுக்கு அரசு பல முறை அழைப்பு விடுத்தது.
அப்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அக்கட்சிகள் வர மறுப்புத் தெரிவித்தன. ஆனால், தற்போதோ நிறைவேற்று அதிகார முடைய ஜனாதிபதி முறைமை ஒழிக் கப்பட வேண்டும் என இவர்கள் கோம் எழுப்புகின்றனர்.
இதை எந்தவகையில் ஏற்றுக் கொள்வது? உண்மையைச் சொல்லப் போனால் அதிகாரப் பரவலாக்கலை குழப்பியதே இந்த எதிர்க்கட்சியனர் தான்” என்றார்.