Breaking
Sun. Dec 22nd, 2024

வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண  சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும்  தேசமானிய   றிப்கான் பதியுதீன் அவர்களின்  வாழ்வாதார கொடுப்பனவாக  வவுனியா மாவட்ட தெரிவு செய்யப்பட்ட மதகுரு மார்களுக்கான வாட்டர் பம்ப் மற்றும் விவசாயத்திற்கு தேவையான சில பொருட்களையும் வழங்கி வைத்தார்

வவுனியா மாவட்ட இணைப்பாளரான பாரி அவர்களின்  தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் ” உண்மையில் இந்த திட்டமானது விவசாயத்தினை அடிப்படையாக கொண்டு வாழ்க்கையை கொண்டுசெல்வோருக்கான ஒரு அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் கொடுக்கப்படுகின்றது அதுமட்டுமல்லாது இயற்கையான முறையில் இயற்கை பசளைகளைக் கொண்டு மனிதர்கள் உண்பதற்கு உகந்த வகையில் செய்யப்படும் விவசாயத் திட்டத்திற்காக என்னால் இயன்ற உதவியை செய்வதில் நான் சந்தோஷமடைகின்றேன் அத்தோடு எமது பிரதேசங்கள் விவசாய நிலங்கள் கூடிய மண்வளமிக்க ஒரு பிரதேசம் இவ்வாறான வளம் வீணடிக்கப்படுவதை விட  அதன்மூலம் எமது வாழ்க்கையை  கொண்டு செல்வது வரவேற்கத்தக்க ஒன்று  நம் உடலில் சக்தி இருக்கும் வரையில் எதோ ஒரு தொழிலை நாம் செய்ய வேண்டும் மற்றவர்களிடம் கையேந்தி மற்றவர்களிடம் தங்கி வாழும் செயற்பாட்டை நாம் இல்லாமல் ஒழிக்க வேண்டும் ” என தெரிவித்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்17571074_398471367194000_928698536_o (1) 17522430_398471370527333_1115665258_o 17522342_398471417193995_1993320983_o

Related Post