‘அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கில் விவரித்துள்ளபடி ஏற்றுமதி தலைமையிலான தொழிற்துறைக்கு தொழில்மயமாக்கலுக்கான பொருத்தமான கொள்கைகளை மேம்படுத்துவதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது‘ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்; ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த 9ஆம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்–லாய் மார்கு க்கும் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:
இந்தத் தொலைநோக்கில் புதிய கைத்தொழிற்துறை பேட்டைகள் நிறுவுதல் மற்றும் புதியவற்றை மேம்படுத்துதல் ஆகியவை அடங்குகின்றன. முன்னேற்றமாக அமைந்த அபிவிருத்திகள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார தொழில்மயமாக்கலுக்கு வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி இயந்திரமாக பயன்படுத்தப்பட்டன. அவர்கள் தொழிற்துறைமயமாக்க வழிகாட்டாலுக்கு பொருத்தமான தொழில்துறை கொள்கைகளையும் உத்திகளையும் ஏற்றுக்கொண்டனர். தற்போது இலங்கையில் இத்தகைய கொள்கை ஆவணங்கள் இல்லை.
இலங்கையில் தொழிற்துறைமயமாக்கலுக்காக கடந்தகாலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அது சரியான தொழிற்துறை கொள்கை மற்றும் அதன் செயற்பாட்டுக்கான விரிவான மூலோபாயம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். சமீபத்தில் அமைச்சரவை அங்கீகரித்த புதிய வர்த்தக கொள்கையில் இத்தகைய கொள்கை முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 2015-20 க்கான செயல்திட்டம் ஆகும் என்றார் அமைச்சர் ரிஷாட்.
இது மிகவும் இலட்சியமான திட்டம். இந்த திட்டங்கள் மேம்பாட்டுக்கு ஏற்றவாறு இருக்கும்போது அவை முக்கியத்துவம் பெறுகின்றன். 2025 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குடன் ஒத்துழைக்கப்படுவது முக்கியம். இங்கே மதிப்பு சங்கிலி ஒருங்கிணைப்பு ஆலோசனைகளும் பயனுள்ளதாக உள்ளன. தெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கு இலங்கையை நாங்கள் பரிந்துரைக்கிறோம் என இச்சந்திப்பின் போது இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்–லாய் மார்கு சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.