Breaking
Mon. Dec 23rd, 2024

தெற்கு அதிவேகப் பாதையில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களனிகம மற்றும் தொடங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட 26வது கிலோ மீற்றர் கட்டைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாதையின் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த வாகனம் ஒன்றுடன் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பஸ் வழமையான பொதுப் போக்குவரத்தில் ஈடுபடக் கூடியதல்ல என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

By

Related Post