Breaking
Mon. Dec 23rd, 2024

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தலைமையிலான தெற்கு ஊடகவியலாளர்கள் நேற்று(27) வடக்கு மாகாண ஆளுனர், மாகாண முதலமைச்சர் ஆகியோரை சந்தித்தனர்.

அத்துடன் இக்குழுவினர் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் பிராந்திய பத்திரிகை மற்றும் ஊடகநிறுவனங்களுக்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம் எனும் தொனிப்பொருளில்  வடக்கு தெற்கு ஊடக சகோதரத்துவத்தை ஒன்றாக இணைக்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்துக்கு நல்லிணக்க பயணம் ஒன்றினை ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக,பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தலைமையிலான தெற்கு ஊடகவியலாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.

விசேட புகையிரதம் மூலம் நேற்று முன்தினம்(26) யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் நேற்று(27) பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். தெற்கிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவவியலாளர்களுடன் வடக்கை சார்ந்த ஊடகவியலாளர்களும் இணைந்து இந்நிகழ்வுகளில் பங்குபற்றினர்

By

Related Post