கடந்த சிலவாரங்களாக மழை பெய்து ஓய்ந்ததையடுத்து கண்டி, தெல்தெனிய பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக தெல்தெனிய பொது சுகாதார அதிகாரிகள் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இதேவேளை இரு டெங்கு நோயாளர்கள் இப்பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வலுவலக சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததுடன் இது தொடர்பாக இப்பிரதேச மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இது இவ்வாறிருக்க பொது சுகாதார அதிகாரிகள் வீடுகள் தோறும் வந்து சுற்றாடல்களை பரிசோதனை செய்து வருகின்றனர்.டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் வீட்டுச் சுற்றாடலை அசுத்தமாக வைத்திருந்த 13 வீடுகள் உரிமையாளர்களைக் கண்டுபிடித்த சுகாதார அதிகாரிகள் அவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பிரசுரங்களை வழங்கியுள்ளனர்.