Breaking
Mon. Dec 23rd, 2024
-Mujeeb Ibrahim-
கடந்த பல வருடங்களாக ஒரு பழமையான கட்டடத்தில் இயங்கிவந்த தெஹிவளை எபனீசர் வீதி பள்ளிவாயல் இப்போது விசாலிக்கப்பட்டு ஆறு மாடிகளை கொண்ட அழகிய அமைப்பில் இயங்க தொடங்கியுள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக இதன் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றன.

இதன்போது அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையொன்றில்தான் ஐவேளை தொழுகையும், வாராந்த ஜும்ஆ நிகழ்வும் நடைபெற்றுவந்தன.

இந்த புதிய கட்டடத்தின் நிர்மாண செலவுகள் அனைத்தையும் தனி நபர் ஒருவரே பொறுப்பேற்றிருந்தார்!

இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது இந்த சகோதரர் மொசாம்பிக் நாட்டில் விபத்தொன்றை சந்தித்து உயிரிழந்து விடுவார் என்ற அளவுக்கு ஆபத்தை எதிர் நோக்கியவர்!

அப்போது எவ்வித அவசர மருத்துவ வசதிகளும் அற்ற விபத்து நடந்த சூழலில் தூரத்தில் நிலை கொண்டிருந்த ஐ. நா உதவிப்படையினரின் ராணுவ முகாமொன்றில் கொரிய இராணுவ வைத்தியரால் நிகழ்த்தப்பட்ட ஆரம்பக்கட்ட சத்திர சிகிச்சையானது இறைவன் உதவியால் அவர் உயிர் பிழைக்க காரணமாயிற்று!

அப்போதெல்லாம் இந்த விபத்தோடு பள்ளிவாயல் நிர்மாணப்பணிகள் நின்று போய்விடும் என்று அச்சந்தெரிவிக்கப்பட்டது.

இறைவன் ஒரு மனிதனிடம் வாங்குவதற்கு நாடியிருக்கும் வேலையினை அவனது ஆற்றலின் உதவி கொண்டு எப்படியாவது நிறைவேற்றுவான் என்பதற்கு இந்த பள்ளிவாயல் பெரியதொரு அத்தாட்சி!

இன்று இந்த கம்பீரமான அழகிய புதிய பள்ளிவாயலில் முதலாவது ஜும்ஆ சிறப்பாக நிகழ்ந்தேறியது.

பிரசவத்திற்கு காத்திருக்கும் கரிசணை மிக்க கணவனை போல வருகிற மக்களுக்கு கதவு திறந்து கொண்டு பள்ளிவாயல் வாசலில் அந்த மனிதர் ஏகப்பட்ட உணர்வுகளோடு நின்றிருந்ததை சரியாக எழுதிவிட எனது எழுத்துகளுக்கு வலிமையில்லை!

எல்லா புகழும் அழ்ழாஹ்வுக்கே.

By

Related Post