எமது கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக ஏ.எம்.ஜெமீல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவிருக்கிறார். அந்த அதிகாரத்தின் மூலம் சாய்ந்தமருதின் அனைத்து தேவைகளையும் அவர் நிறைவேற்றித் தருவார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலகம் இன்று சாய்ந்தமருதில் திறந்த வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சீ பிரீஸ் மண்டபத்தில் இடம்பெற்ற உடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் கிடைக்கவுள்ள தேசியப் பட்டியல் ஆசனங்களுள் ஒன்றை எமது கட்சியின் எழுச்சிக்காக தன்னை அர்ப்பணித்துள்ள மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்களுக்கு வழங்குவதற்கு கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் றிஸாத் தெரிவித்தார்.
சாய்ந்தமருது நகர சபை விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் றிஸாத்;
எமது கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக ஜெமீல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவிருக்கிறார். அந்த அதிகாரத்தின் மூலம் சாய்ந்தமருதின் அனைத்து தேவைகளையும் அவர் நிறைவேற்றித் தருவார். நான் அதற்கு பக்கபலமாக இருப்பேன் என்று உறுதியளித்தார்.
இந்த ஊடக மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் தேசிப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் மக்கள் காங்கிரஸ் தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் முன்னாள் எம்.பி.யும் முதன்மை வேட்பாளருமான எஸ்.எஸ்.பி.மஜீத் முன்னாள் உபவேந்தரும் வேட்பாளருமான எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கல்முனை முன்னாள் மேயரும் வேட்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உட்பட பத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.