தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கம் செய்யாததை நாம் செய்கின்றோம் என்பதற்காக தேசியப் பாதுகாப்பில் சந்தேகம் கொள்ளத் தேவையும் இல்லை. தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க போவதில்லை. அதேபோல் இப்போதிருக்கும் நிலைமையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, எந்த சந்தர்பத்திலும் சர்வதேச நீதிமன்றத்தின் மூலமாக எமது இராணுவத்தை விசாரிக்க அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் உள்ளனர். எனினும் உள்ளக பொறிமுறைகள் சரியாக நடைபெறும். இதன் போது இராணுவம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றாலும் அது எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை இலக்குவைத்த பொறிமுறையாக அமையாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.