Breaking
Mon. Dec 23rd, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியின் கன்னி, வரவு-செலவுத்திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்றது.

04.22 PM – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

04.20 PM – இலங்கை பணம் வெளிநாடுகளில் உள்ளது. மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

04.18 PM – எந்தவொரு வங்கி மூலமும் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு.

04.16 PM – புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம்.

04.13 PM – 500 வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி.

04.09 PM – இந்தியாவில் காணப்படும் ‘ஆதார்” திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும்.

04.09 PM – இந்தியாவில் காணப்படும் ‘ஆதார்” திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும்.

04.07 PM – 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்.

04.05 PM –  அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்தம் இரத்தினக் கல் ஏலம்.

04.06 PM – கிராமசேவக பிரிவுகளை அபிவிருத்தி செய்ய  1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

04.04 PM – பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க திட்டம்.

04:04 PM – வெளிநாட்டவர்களுக்கு கூலி அடிப்படையில் காணி வழங்கப்படும் போது அறவிடப்படும் விரி விலக்களிக்கப்படும்

04:04 PM – போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்புக்காக 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

04:02 PM – யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளை இல்லாமல் செய்வதற்கு 3 வருடங்களுக்கு 4,000 மில்லியன் ரூபாய் வழங்கப்படும்.

04:00 PM – ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக நிறுவனமொன்று உருவாக்கப்படும்.

04:00 PM – அரச நிறுவனங்கள் அனைத்தையும்  2018ஆம் ஆண்டு ஒரு வலயமைப்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

03:59 PM – மீனவ மற்றும் விவசாய வலயத்தை உருவாக்குவதற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

03:58 PM – தங்கம் இறக்குமதிக்கான 50 உரிமப்பத்திரங்களை அறிமுகப்படுத்துவேன்.

03:58 PM – மாணிக்கக்கற்கள் ஏல விற்பனை இலங்கைக்குள் இடம்பெறுவதற்கு யோசனை ஒன்றை முன்வைக்கின்றேன்.

03:55 PM – அலங்காரமீன் கைத்தொழிலில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு உந்துவேன்.

03:53 PM – வவுனியாவில் புதிய பொருளாதார வலயம் உருவாக்கப்படும். கிராமிய விவசாயத்துக்கு உதவும் வகையில் சிறிய குளங்கள் மற்றும் ஏரிகள் புனரமைக்கப்படும். அதற்காக 2,000 ரூபாய் ஒதுக்கப்படும்.

03:52 PM – கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கிராம சேவகர் பிரிவு கொத்தணிக் கிராமமமாக செயல்படுத்தப்படும். இதில் பொதுவசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். ஒரு கிராமத்துக்கு 1,500 ரூபாய் ஒதுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன்.

03:48 PM – பாக்கு சேகரிக்கும் வலயம் உருவாக்கப்படும். அந்த தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு வணிக ரீதியில் பயிர் செய்வதற்காக அரசாங்கம் நிவாரணம் வழங்கும்.

03:47 PM – தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

03:47 PM – தேயிலை தொழிற்சாலை மதீப்பீட்டைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிலோன் ரீ என்ற பெயர் தொடர்ந்து இருப்பதற்கு அந்தப் பெயரை பொறிப்பது கட்டாயமாக்கப்படும்.

03:45 PM – உள்ளூர் கோழி இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட புதிய சந்தைக்கு கோழிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
03:44 PM – மீனவர்களின் காப்புறுதிக்காக ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

03:44 PM – உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். 400 பக்கெட்டின் ஆகக் குறைந்த சில்லறை விலை 325 – 295 வரை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்

03:42 PM – உள்ளூர் பால் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு மற்றும் இறக்குமதியை குறைப்பதற்கு நான் மதிக்கின்றேன். எனினும், பால் விலை கூடியதுடன், யோக்கட் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்தன.

03:41 PM – பழவகை மற்றும் மரக்கறி கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நிவாரணம் வழங்கப்படும். இவற்றுக்குத் தேவையான உபகரணங்களுக்கான இறக்குமதி வரி விலக்களிக்கப்படும்.

03:40 PM – நெல் விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணங்கள் வழங்கப்படும். பெரு மற்றும் சிறு விவசாயிகளை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

03:39 PM – விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கூடுதலான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும்.

03:36 PM – 2014ஆம் ஆண்டு அரிசி அறுவடை குறைந்திருந்தது. உரப் பாவனையினால் சிறுநீரக நோயாளர்களின எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இன்னும் வாதப்பிரதிநிதிவாதங்கள் இடம்பெறுகின்றன.

03:36 PM – அரிசி ஏற்றுமதி வர்த்தகத்தை நோக்காகக்கொண்டு அரிசி உற்பத்தியாளர்களுக்கு உதவியளிக்கப்படும். அதற்காக வெளிநாட்டுச் சந்தையை அறிமுகப்படுத்துவதற்கு முறைமையொன்று தயாரிக்கப்படும்.

03:34 PM – கீரி சம்பாவுக்கு 50 ரூபாய், சம்பா  நெல்லுக்கு 40 ரூபாய், நாட்டரிசி நெல்லுக்கு 38 ரூபாய் ஆகக்குறைந்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனூடாக அரிசி ஒரு கிலோகிராம்  65 ரூபாய்க்கு நுகர்வுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

03:33 PM – விவசாய அறுவடையின் போது, விலைக் குறைப்பைத் தடுப்பதற்கு உயர்ந்த தரத்திலான களஞ்சியசாலைகள் உருவாக்கப்படும்.

03:32 PM – புத்துயிராக்கம் இல்லாத இடங்களை தனியார் பிரிவுகளுக்கு பெற்றுக்கொடுத்து, அதனூடாக அதனை மேம்படுத்துவதற்காக 1,000 மில்லின் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது.

03:31 PM – பல்பொருள் அங்காடிகளில் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிலாளர்களுக்கு சிறிய இடத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்

03:30 PM – சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக்கர்கள் கடனை பெறும்போது பிணை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

03:41 PM – பழவகை மற்றும் மரக்கறி கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நிவாரணம் வழங்கப்படும்ட. இவற்றுக் தேவையான உபகரணங்களுகக்கான இறக்குமதி வரி விலக்களிக்கப்படும்

By

Related Post