அமையப்போகும் தேசிய அரசில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்தவுக்கு நேற்று முன்னாள் அமைச்சரும், ஜாதிக யஹல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்தார்.
“தேசிய நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்படவுள்ள இப்புதிய அரசில் இணைந்துகொள்வதற்காக பல பிரதானக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
ஆகவே, ஜனாதிபதி மஹிந்தவும் அவருடைய ஆதரவாளர்களும் இதில் ஒரு பங்காளியாக இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்” என சம்பிக்க மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, யுத்தக் குற்றச்சாட்டுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் இப்பிரச்சினையிலிருந்து ஜனாதிபதி மஹிந்த, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய மற்றும் முப்படை பிரதானிகளை பாதுகாப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
ஜாதிக ஹல உறுமய ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கோட்டை, சொலிஸ் ஹோட்டலில் நேற்று முற்பகல் நடைபெற்ற போதே இவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில், எதிரணி பொது வேட்பாளரான மைத்திரிபால சிறி சேன, ஜாதிக யஹல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், அக்கட்சியின் ஊடகப் பேச் சாளர் நிஷாந்த வர்ணகுல சூர்ய மற்றும் யஹல உறுமயவின் பிரதானி கள் என பலர் கலந்து கொண்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.