Breaking
Mon. Dec 23rd, 2024

தேசிய இராணுவ வீரர்கள் மாதம் 2016 அறிவிக்கப்பட்டு அதன் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கும் நிகழ்வு நேற்று (05) ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இராணுவ சேவை அதிகாரசபையின் தலைவர் அனோமா பொன்சேக்கா கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

மூன்று தசாப்தகால கொடிய யுத்தத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் தேசிய இராணு வீரர்கள் மாதத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் கொடி விற்பனையினூடாக பெறப்பட்ட நிதியும் மாகாண ஆளுநரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பல தியாகங்கள் செய்த இராணுவத்தினருக்கு நாம் வழங்கும் சிறந்த மரியாதை அவர்கள் பெற்றுகொடுத்த சமாதானத்தை கட்டிக்காப்பதே என்றும் இராணுவ வீரர்களின் குடும்பங்களுடைய நலன்புரியை விஸ்த்தரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கு அனைவரினதும் சலுகைகளை மேம்படுத்துவதற்கும் அரச கொள்கைக்கமைய தற்போதைய அரசு கடமைப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.பி.ஜீ கித்சிறி மற்றும் பாதுகாப்பு துறை பிரதானி உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By

Related Post