ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தேசிய வேலை திட்டமான விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம் எனும் இலங்கை மக்களுக்கான உணவு பாதுகாப்புத்திட்டத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது வேலைத்திட்டம் இன்று தம்பலகமம் பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று இடம்பெற்றது .
இந்த நிகழ்வு திருகோணமலை மாவட்ட அபிவிருதிகிழு இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இதில் முன்னால் மாகாண அமைச்சர் ஆரியவதி , மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சிவநாதன் , கிழக்குமாகான விவசாய பணிப்பாளர் Dr. ஹுசைன், கிழக்குமாகாண சட்ட ஆலோசகர் அணிப் லெப்பை , கிழக்குமாகான சுகாதார அமைச்சின் பிரதி செயலாளர் ஹுசைன், மாகாண பிரதம செயலக நிருவாக அதிகாரி திருமதி முரளிதரன் திருகோணமலை மாவட்ட விவசாய பணிப்பாளர் குகதாசன் , திருகோணமலை , முல்ல்லைதீவு மாவட்ட கமநல ஆணையாளர் திரு . புனிதகுமார் , காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர் அருதவராஜா , தமபலாகமம் பிரதேச செயலலாளர் உட்பட விவசாய அமைபின் தலைவர்கள் ,விவசாயிகள் உட்பட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.
இங்கு விவசாயிகளுக்கான உரம் , விதைகள் , மரக்கன்றுகள் ஆளுநர் , பாராளுமன்ற உறுப்பினர் ,அதிகாரிளால் வழங்கி வைக்கப்பட்டது.