Breaking
Mon. Dec 23rd, 2024

தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று திங்கட்கிழமை(22) முதல் 29ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வாரத்துக்குள், உணவுகளை பரிசோதனைக்கு உட்படுத்தல், உணவகங்களை சோதனைகளுக்கு உட்படுத்தல் மற்றும் பாடசாலைகளின் சிற்றுண்டிசாலைகளை சோதனைக்கு உட்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனியின் மட்டத்தை குறிக்கும் அட்டவணை வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பிலும் தேடி ஆராய்ந்து பார்க்கப்படும். தேநீருக்காக சீனியை புறம்பாக வழங்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது குறித்தும் சோதனை செய்யப்படும்.

By

Related Post