Breaking
Tue. Nov 19th, 2024

-முர்ஷிட் கல்குடா-

இலங்கைத் திருநாட்டில் இன்று தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் எனது புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

தமிழ், சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இன, மத, கட்சி, நிற பேதங்களை ஒதுக்கிவிட்டு எமது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான தேசிய நிகழ்வு சிங்கள, தமிழ் புத்தாண்டாகும்.

சூரியனை முதலாகக் கொண்ட இயற்கைக்கு நன்றிக் கடன் செலுத்தும், தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் சூரியத் திருவிழாவானது, புதிய எண்ணங்களுடனும் திடசங்கற்பத்துடனும் வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்வதற்குக் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகும்.

இந்த வருடப்பிறப்பை இந்துக்களும், பௌத்தர்களும் கொண்டாடி வருகின்றனர். மற்றது சந்திரன் பூமியை வலம் வருவதை அடிப்படையாகக் கொண்டு வரும் மாதங்களும் வருடமும் சாந்திரமானம் எனப்படும்.

இலங்கை வாழ் சைவ இந்து மக்களும் பௌத்த சிங்கள மக்களும் ஒருமித்துக் கொண்டாடும் தனிச்சிறப்புப் பெற்றது புதுவருடப்பிறப்பு. அதனால் இது ஒரு தேசிய தின விழாவாகும். பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல் பெரியோரை வணங்கி ஆசி பெறுதல் பொங்கல் பொங்குதல் ஆகியன இரு மக்களிடையேயும் ஒரே மாதிரியாக கைக்கொள்ளப்பட்டு வருதல் ஆச்சரியமானதே.

இப் புத்தாண்டுப் பிறப்பில் அனைவரும் நல் எண்ணம் கொண்டு நற்செயல்களை ஆற்றி நம் நாடு சிறக்க பணிபுரிவோம் எனக் கூறி இலங்கை வாழ் அனைத்து தமிழ், சிங்கள மக்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Related Post