தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்க கல்வி அமைச்சர் விராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று முன்தினம் (14) மேற்கொண்ட ஆர்ப்பாடத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அசாதாரண தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரியப்படுத்துவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் நியாயமான தீர்ப்பு வழங்குமாறு கோரி முறையிடுவதாகவும் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.