தேசிய கீதத்தைக் கூட நாங்கள் இன்னும் ஒரே மொழியில் படித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலைமை இருப்பது வருந்தத்தக்க விடயம், இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாங்களாக இருக்கிற ஒரு மாகாண சபையில் கூட இரண்டு மொழிகளிலும் இசைப்பதற்கு நாங்கள் துணிய வேண்டும். அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், அது உண்மையிலேயே நாங்கள் எல்லோரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயம்.
என்னைப் பொறுத்தமட்டில் நாங்கள் துணிகரமாக சில விசயங்களில் அரசாங்கம் மேலிடம் பிடிவாதமாக இருந்தாலும், இந்த மாநிலத்திலாவது அது சரிவர நிறைவேற்றப்பட வேண்டும்.
அதற்கு அமைச்சர்களுக்கு துணிவு வேண்டும். பயப்படாமல் அந்த விசயங்களைச் செய்ய வேண்டும். இப்போது ஊவா மாகாணத்திலும் ஒரு தேர்தல் நடந்து கொண்டிருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்
அங்கும் கூட முழுக்க முழுக்க தமிழை மாத்திரம் தெரிந்தவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அங்கும் இதேவிதமாகத்தான் விசயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
எனவே அங்கிருக்கின்ற மலையகத் தலைமைகளும் இந்த விசயத்தில் கொஞ்சம் பிடிவாதமக இருக்க வேண்டும். அத்துடன் நாட்டில் இன்றிருக்கின்ற அந்த மேலாதிக்கப் போக்கு என்ற விடயத்தில் மாற்றம் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.