அரசாங்கத்தின் உயர் அமைப்பான தேசிய நிறைவேற்றுக்குழுவில் நான் இடம்பெறவில்லை. எனக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவுமில்லை. நான் இதுவரை அந்த குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் இல்லை என்று என்று சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்தார்.
கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற சமூக நீதிக்கான அமைப்பான நிபுணத்துவ கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாறறிய சோபித்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேரர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
நான் அரசாங்கத்தின் உயர் அமைப்பான தேசிய நிறைவேற்றுக்குழுவில் அங்கத்துவம் வகிப்பதாக பத்திரிகைகளில் பார்த்தேன். ஆனால் ஒரு விடயத்தை இங்கு திட்டவட்டமாக குறிப்பி்டுகின்றேன்.
அதாவது அரசாங்கத்தின் உயர் அமைப்பான தேசிய நிறைவேற்றுக்குழுவில் நான் இடம்பெறவில்லை. எனக்கு இதுவரை அரசாங்கத்தின் சார்பில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படவுமில்லை. நான் இதுவரை கலந்துகொள்ளவும் இல்லை.
நான் தேசிய நிறைவேற்றுக் குழுவின் அங்கத்தவராக இருந்தால் எனக்கு அழைப்பு வந்திருக்கும். எனினும் எனக்கு அவ்வாறான எந்த அழைப்பும் வரவில்லை. இதனை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். மாறாக நான் தேசிய நிறைவேற்றுக்குழுவில் இருப்பதாக யாரும் கருதக்கூடாது என்றார்.