Breaking
Fri. Nov 15th, 2024

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி வர்த்தமானியில் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்பாக Micro finance நிதிச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் விடுத்த பணிப்புரையின் பேரிலேயே இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

ஏழை மக்களில் அதிமானோருக்கு, முக்கியமாக பெண்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நுண்பாக நிதிக் கடன் திட்டமானது இந்த நாட்டில் ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இது வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு நிகழ்வாகும். சட்ட வரையறையொன்று இல்லாமலிருந்ததன் காரணமாக நுண்பாகக் கடன் என்ற போர்வையில் சக்வித்தி, தன்டுவம் முதலாளி போன்ற மோசடி வர்த்தகர்கள் உருவாகியதன் ஊடாக அப்பாவிப் பொது மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

இதன் பின்னர் அவ்வாறான முறைகேடுகள் நிகழ்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

By

Related Post