இலங்கையில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்த மஹிபால இதனை அறிவித்துள்ளார்.
இந்த நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது டெங்கு மற்றும் சீக்கா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழையின் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நுளம்புகளினால் பாதிப்புகள் ஏற்படலாம்.
இதனால் நுளம்பு ஒழிப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாலித தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளான 40 ஆயிரத்து 652 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 64 பேர் டெங்கு நோயின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.