தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இன்று முதல் அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நாட்டிலுள்ள 300 க்கும் மேற்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 26 பிரிவுகள் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ள பிரிவுகளாக இனங்காணப்பட்டுள்ளன. இதில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளடங்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை 286 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நுளம்பு ஒழிப்பு வாரத்தினுள் வீடுகள், பாடசாலைகள், பொது இடங்கள், அரச மற்றும் தனியார் கட்டடங்கள் ஆகிய இடங்களை பரிசோதனை செய்தல், துப்புரவு செய்தல் உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.