தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற போது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் , அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களும் கலந்துகொண்டார்.