சுஐப் எம் காசீம்.
தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடாத்த படும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் த்ரிவித்தார்.இன்று(08/04/2017) யாழ்ப்பாணத்தில், அரசாங்க அதிபர் தலைமையில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் இன்னொரன்ன பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மீலாதுன் நபி விழாவின் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களால் மக்களுக்கு இன்னும் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் கலாசார மேம்பாட்டை விருத்தி செய்ய உதவும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மீலாத்விழா இனநல்லுறவை பேணுவதற்கு வழி வகுக்கும் என்றார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த விழாவில் அதிதிகளாக கலந்துகொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டார். முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் அவர்களிடம் தாம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்று இந்த விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமைச்சர் தனது நன்றிகளையும் வெளிப்படுத்தினார்.இந்த விழாவின் மூலம் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் நன்மை பெரிதும் அடைவர் எனவும் அவர் குறிபிட்டார்.
முன்னதாக யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டில் அவர்களின் பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டு பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முடிவுகள் எட்டப்பட்டது. மீள்குடியேறியுள்ள யாழ் முஸ்லிம்களின் பிரதிநிதிகளுக்கும் அரச அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடலாகவும் இது அமைந்தது.
காணியற்றோருக்கு காணிகளை பெற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் இங்கு ஆராயப்பட்டதுடன் வீடுகள் இல்லாதோருக்கு வீடுகளை அமைத்து தர தான் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்சாத் ரஹ்மதுல்லாஹ் அமைச்சரின் பொது தொடர்பு அதிகாரி மொஹிடீன், உப்புக்கூட்டுத்தாபண தலைவர் அமீன் அமைச்சரின் யாழ் மாவட்ட மீள் குடியேற்ற இணைப்பாளர் மௌலவி சுபியான் மற்றும் மக்கள் காங்கிரசின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அமீன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்தனர்.