Breaking
Sun. Dec 22nd, 2024

அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தினால் (CMA) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு- 2016 மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கியல் துறையில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் நேற்று (11) மாலை கொழும்பு சினமன் )லேக் ஹோட்டலில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் விருதுகளையூம் வழங்கி வைத்தார். நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் வட்டவல தலைமை வகித்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கனடா உயர் ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங், சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் ஹோ யகீ ஆகியோர் உட்பட இன்னும் சில வெளிநாட்டு கல்விமான்கள் பங்கேற்றனர்.

7M8A0638 7M8A0731 7M8A0607

By

Related Post