மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இலங்கையில் இணைய முறிவொன்றினை யேற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்காக இஸ்ரேலில் இருந்து கணனிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவை கண்டி பிரதேசத்தில் வீடொன்றில் இணைக்கப்பட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவியிருந்தது.
குறித்த கணினி இயந்திரங்களை செயற்படுத்துவதற்காக இஸ்ரேலில் பயிற்சி பெற்ற நபர்கள் இருந்தார்கள் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில்,
அவர்கள் புலனாய்வு பிரிவு உறுப்பினர்களா அல்லது வேறு நபர்களா என்பது தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், ராஜபக்ச ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டு ஜனாதிபதி இல்லத்தின் ஒரு அரையில் பொருத்தப்பட்டிருந்த உவாவி (Huawei) நிறுவனத்திற்கு சொந்தமான இயந்திரங்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.