Breaking
Mon. Jan 6th, 2025

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பினால் அவரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எந்தவகையிலும் இணைத்துக் கொள்ள வேண்டாம் என கட்சித் தலைமையிடம் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டாரதென்ன கோன் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு முக்கிய காரணம் பசில் ராஜபக்ச என்று தெரிவித்துள்ள ஜனக பண்டார,

”தேர்தலில் எம்மை பலிகொடுத்து பசில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கினார். தற்போது கட்சியைப் பலப்படுத்தி, புதிய உத்வேகமொன்றை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Related Post