Breaking
Mon. Jan 13th, 2025
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள், பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தச் சதி குறித்து,  நாம் தெளிவாக இருந்துகொள்ள வேண்டும்.
தற்போதைய நிலவரத்தின் படி, பொருட்களுக்கான விலைவாசி மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் காரணமாக, கிட்டத்தட்ட ஏழு இலட்சத்திலிருந்து எட்டு இலட்சம் வரையான வாக்குகள் மொட்டுக் கட்சியினர்களுக்கு குறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
எனவே, நாம் எதிர்கொள்ளவுள்ள பாராளுமன்ற தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைத்தான் வென்றெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் நாம் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும்” என்றார்.

Related Post