Breaking
Wed. Dec 25th, 2024

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, இதுவரை 49இலட்சம் வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் செய்து முடிவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய வாக்குச்சீட்டுக்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் விநியோகம் செய்து முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விஷேட தினங்களாக கடந்த 2ஆம் திகதி அறிவிக்கப்பட்ட அதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதியும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விஷேட தினமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தமது வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகம் அல்லது தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்குச் சென்று இது தொடர்பில் குறிப்பிடும்படி தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினமும் எதிர்வரும் 8ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post