Breaking
Tue. Dec 24th, 2024

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தினால் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடை­பெற இருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை கண்­கா­ணிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட இருக்­கின்­றன.

தேர்தலை கண்­கா­ணிப்­ப­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தேர்தல் கண்­கா­ணிப்பு திட்­டத்தின் தலைமை அதி­கா­ரி­யாக ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தின் உறுப்­பி­ன­ரான கிறிஸ்­டியன் ப்ரேடா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

அவர் எதிர்­வரும் சில நாட்­களில் இலங்கை வரவுள்ளார்.இதேவேளை இலங்கையில் நடை­பெற இருக்கும் தேர்­தலை எந்­த­வித குறுக்­கீ­டு­களும் இல்­லாமல் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக கண்காணிப்பதே எமது நோக்கம் என்று கிறிஸ்டியன் ப்ரேடா தெரிவித்துள்ளார்.

Related Post