Breaking
Sun. Dec 22nd, 2024

பாரா­ளு­மன்ற தேர்தல் அறி­விக்­கப்­பட்ட கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை தேர்­தல்கள் தொடர்­பி­லான முறைப்­பா­டுகள் மற்றும் சுற்­றி­வளைப்­புக்­களில் 197 பேர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அவர்­க­ளி­ட­மி­ருந்து 57 வாக­னங் களும் கைப்­பற்­றப்­பட்டு வழக்குப் பொருட்­க­ளாக பதி­யப்­பட்­டுள்­ளன.

பொலிஸார் மேற்கொண்ட 89 சுற்­றி­வ­ளைப்­புக்கள் ஊடாக நாட­ளா­விய ரீதியில் 170 பேரும் கிடைக்கப் பெற்ற 64 முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் 27 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

பொலிஸார் முன்­னெ­டுத்த சுற்­றி­வளைப்­புக்­களில் பெரும்­பாலும் சட்ட விரோத போஸ்­டர்கள் தொடர்­பி­லான விட­யங்கள் முன்­னிலை வகிப்­ப­தா­கவும் சட்ட விரோத ஊர்­வ­லங்கள் உள்­ளிட்­ட­வையும் அதில் அடங்­கு­வ­தா­கவும் அவர் மேலும் கூறினார்.

Related Post